என் மலர்
நீங்கள் தேடியது "மாதத்தின் 2 மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது."
- 50 மாற்றுத்திறனாளிகளில் 5 பேர் தேர்வு
- ஏராளமானோர் பங்கேற்பு
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதத்தின் 2 மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன் அடிப்படையில் இம்மாதத்தில் கடந்த 8ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் 11 வேலை அளிப்பவர்கள் 66 வேலைநாடுனர்கள் கலந்து கொண்டனர்.இதில் 54 வேலை நாடுனர்கள் மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் கலந்து கொண்ட வேலை அளிப்பவர்கள் மாற்றுத்திறனாளி நல அலுவலகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயற்கை உறுப்புகள் வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50 மாற்றுத்திறனாளிகளுக்கு நேர்காணல் நடத்தி 5 நபர்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.






