என் மலர்
நீங்கள் தேடியது "மறுகட்டமைப்பு கூட்டம். Reconstruction meeting"
- கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
- பார்வையாளராக வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் ஜனனி கலந்து கொண்டு பேசினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பார்வையாளராக வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் ஜனனி கலந்து கொண்டு பேசினார். இதில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதன்படி பள்ளி மேலாண்மை குழு தலைவியாக சரஸ்வதி, துணை தலைவியாக நதியா நந்தினி, வார்டு உறுப்பினர்களாக கணேசன், தேவி, இல்லம் தேடி உறுப்பினராக ராதா மற்றும் அன்பரசி ஆகியோர் தேந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் ராஜா நன்றி கூறினார்.






