என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டல பூஜை தொடக்கம். Mandal Puja begins"

    • பூலாம்பாடி பேரூர் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நேற்றைய தினம் முதல் 48 நாள் மண்டல பூஜை தொடங்கியது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூர் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் ஊர் மக்கள் மற்றும் பிரபல தொழிலதிபர் பிரகதீஷ் குமார் முயற்சியால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.

    முன்னதாக யாகசாலைகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. கும்பாபிஷேக விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நேற்றைய தினம் முதல் 48 நாள் மண்டல பூஜை தொடங்கியது. இந்த மண்டல பூஜை தொடக்க விழாவில் தொழிலதிபர் பிரகதீஸ் குமார், ரந்தினி பிரகதீஸ் குமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

    விழாவில் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. 48 நாட்கள் மண்டல பூஜைக்கு பின்னர் மறு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தடைபட்டு நின்ற கோவில் கும்பாபிஷேக விழா சிறப்புற நடந்ததால் பூலாம்பாடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×