என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் சாதனையாளர் விருது. Female Achievement Award"

    • சுதந்திர தினவிழாவில் சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதால் தகுதி வாய்ந்த பெண் சாதனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
    • இவ்விருதிற்கான கருத்துருக்கள் (http://awards.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பெறப்படுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    சுதந்திர தினவிழாவில் சிறந்த பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதால் தகுதி வாய்ந்த பெண் சாதனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பிப்பவர்கள் தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்ப்பட்டவராகவும் இருக்க வேண்டும். இவ்விருதிற்கான கருத்துருக்கள் (http://awards.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பெறப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 75020 34646, 88388 72443 என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×