என் மலர்
நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு எந்திரங்கள் விவி பேட் கண்ட்ரோல் யூனிட் உள்ளிட்ட எந்திரங்கள் ஆய்வு"
- அதிகாரிகள் உத்தரவால் நடவடிக்கை
- கலெக்டர் பார்வையிட்டார்
வேலூர்:
தமிழக சட்டமன்ற பொது தேர்தலின் போது பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டனர்.
அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் விவி பேட் கண்ட்ரோல் யூனிட் உள்ளிட்ட எந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலையில் பார்வையிட்டார்.
தேர்தலின் போது பழுதடைந்த 62 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் விவிபேட் உட்பட மொத்தம் 436 எந்திரங்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.






