என் மலர்
நீங்கள் தேடியது "புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள்"
- ஓசூர் அருகே அலசப்பள்ளியில் சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது.
- இந்த பணியை பிரகாஷ் எம்.எல்.ஏ . தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட அலசப்பள்ளி - பட்வாரப்பள்ளி ஊராட்சி அலசப்பள்ளி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் சுமார் 3 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்படவுள்ளது.
இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு ஒசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் ஓசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர்கள் சுனிதாமுரளி, ரமேஷ், ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






