என் மலர்
நீங்கள் தேடியது "டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் பலி"
- கிருஷ்ணகிரி அருகே 2 டாஸ்மாக் ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்தனர்.
- மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பண்ணாரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). கிருஷ்ணகிரி மாவட்டம் சுருளிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (45).
இவர்கள் 2 பேரும் கிருஷ்ணகிரி அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். நேற்று சக்திவேலுவும், மாரிமுத்துவும் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி சேஸ் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சக்திவேல், மாரிமுத்து 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சக்திவேல் உயிரிழந்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லப்பட்ட மாரிமுத்து அங்கு உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






