என் மலர்
நீங்கள் தேடியது "ஏ.வி.பி. டிரஸ்ட் நேஷனல் பள்ளி"
- விழாவில் மருத்துவர்களாக வேடமணிந்து சிறுவர்கள் வந்து அசத்தினர்.
- ஏ.வி.பி. பள்ளியில் படித்து இன்று மருத்துவ மாணவர்களாக மக்கள் பணி செய்ய காத்திருக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்–பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் மருத்துவர்களை வாழ்த்தி விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் முன்னாள் மாணவரும் அவினாசி மகேஸ்வரி மெடிக்கல் சென்டர் நுரையீரல் சிறப்பு மருத்துவருமான டாக்டர் ஆர்.பிரகாஷ், பல் மருத்துவர் டாக்டர் கவிதா ராஜா ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவம் குறித்த சிறப்பான தகவல்களை வழங்கினர்.
அவர்களை பள்ளி முதல்வர் வரவேற்றார். விழாவில் மருத்துவர்களாக வேடமணிந்து சிறுவர்கள் வந்து அசத்தினர். இதில் ஏ.வி.பி. பள்ளியில் படித்து இன்று மருத்துவ மாணவர்களாக மக்கள் பணி செய்ய காத்திருக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாணவர்கள் அனைவரும் ஏ.வி.பி. பள்ளி நிர்வாகத்தால் கவுரவிக்கப்பட்டனர். விழாவின் நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.






