என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமை பூங்கா அமைக்க பூமி பூஜை"

    • தர்மபுரி ஏஎஸ்டிசி நகரில் 75 .25 லட்சத்தில் பசுமை பூங்கா.
    • பூங்கா அமைக்கும் பணியினை நகராட்சி சேர்மன் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் இன்று பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது.

    தருமபுரி,

    தர்மபுரி ஏ.எஸ்.டி.சி நகரில் 75 .25 லட்சத்தில் பசுமை பூங்கா அமைக்கும் பணிக்கு நகர மன்ற சேர்மன் லட்சுமி நாட்டான் மாது இன்று பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.

    தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட ஏ எஸ் டி சி நகரில் இன்று கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 75.25 லட்சத்தில் பசுமை பூங்கா அமைக்கும் பணியினை நகராட்சி சேர்மன் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் இன்று பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சித்ரா, நகராட்சி துணைத் தலைவர் நித்திய அன்பழகன், நகர செயலாளர் அன்பழகன், திமுக பொதுக்குழு உறுப்பினர் நாட்டான் மாது,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×