என் மலர்
நீங்கள் தேடியது "காப்பீட்டுத் தொகை. Amount of insurance"
- கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 5ம்தேதி விழுப்புரம் அருகே லோடு ஆட்டோ சென்றபோது விபத்து ஏற்பட்டு அதில் லோகநாதன் இறந்தார்.
- லோகநாதனின் விபத்து காப்பீட்டு இன்சூரன்ஸ் தொகை வழங்ககோரி அவரது குடும்பத்தினர்களாக சம்பூர்ணம் மற்றும் அவரது பிள்ளைகளான செல்லம்மாள், ராஜா, சரோஜா, சதீஸ் ஆகியோர் பெரம்பலூரில் உள்ள பைனான்ஸ் கம்பெனி லிமிடேட்டை அணுகினர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி சம்பூர்ணம்(வயது47), இவரது மகள் செல்லம்மாள் (27), மகன் ராஜா(24), மகள் சரோஜா (21), மகன் சதீஸ் (18) ஆகியோர் கடந்த 2010ம் ஆண்டு லோகநாதன் தொழில் செய்வதற்காக சோழமண்டலம் முதலீடு மற்றும் பைனான்ஸ் கம்பெனியில் கடன் பெற்று லோடு ஆட்டோ வாங்கினார். அப்போது லோகநாதன் பெயரில் ரூ. 2 லட்சத்து 98 ஆயிரத்து 337 க்கு தனி நபர் விபத்து காப்பீடு செய்யப்பட்டு அதற்கான பத்திரத்திரத்தை சோழமண்டலம் பைனான்ஸ் வழங்கியிருந்தது.
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 5ம்தேதி விழுப்புரம் அருகே லோடு ஆட்டோ சென்றபோது விபத்து ஏற்பட்டு அதில் லோகநாதன் இறந்தார். இது குறித்து முண்டியபாக்கம் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.
லோகநாதனின் விபத்து காப்பீட்டு இன்சூரன்ஸ் தொகை வழங்ககோரி அவரது குடும்பத்தினர்களாக சம்பூர்ணம் மற்றும் அவரது பிள்ளைகளான செல்லம்மாள், ராஜா, சரோஜா, சதீஸ் ஆகியோர் பெரம்பலூரில் உள்ள சோழமண்டலம் முதலீடு மற்றும் பைனான்ஸ் கம்பெனி லிமிடேட்டை அணுகினர். ஆனால் அதற்கு இன்சூரன்ஸ் தொகை வழங்க சோழமண்டலம் பைனான்ஸ் கிளை மேலாளர் மறுத்துள்ளார். இதை தொடர்ந்து சென்னை சோழமண்டல பைனான்ஸ் கிளை மேலாளர் மற்றும் பொதுமேலாளர் ஆகியோரிடம் முறையிட்டும் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை.
இதனால் மனஉளைச்சல் அடைந்த சம்பூர்ணம் மற்றும் அவரது பிள்ளைகளான செல்லம்மாள், ராஜா, சரோஜா, சதீஸ் ஆகியோர் தங்களுக்கு வழங்கவேண்டிய விபத்து காப்பீட்டு தொகையை பெரம்பலூரில் உள்ள சோழமண்டலம் முதலீடு மற்றும் பைனான்ஸ் கம்பெனியிடமிருந்து பெற்றுத்தரக்கோரி கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த கோர்ட் தலைவரும், நீதிபதியுமான ஜவஹர் மற்றும் கோர்ட் உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, சேவை குறைபாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் சம்பூர்ணம் மற்றும் அவரது பிள்ளைகளான செல்லம்மாள், ராஜா, சரோஜா, சதீஸ் ஆகியோருக்கு இன்சூரன்ஸ் தொகையான ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்து 337 மற்றும் மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக
ரூ. 1 லட்சமும், வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் 4 லட்சத்து 8ஆயிரத்து 337 ரூபாயை சோழமண்டம் முதலீடு மற்றும் பைனான்ஸ் கம்பெனியின் மேலாளர், கிளை மேலாளர், பொதுமேலாளர் ஆகியோர் 45 நாட்களுக்குள் வழங்கவேண்டும், இல்லையென்றால் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து 9 சதவீத வட்டியுடன் தொகையை வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.






