என் மலர்
நீங்கள் தேடியது "பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்."
- போலீசார் ரோந்து சென்றபோது சிக்கினார்
- பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த சின்னாலபல்லி பகுதியில் கள்ளச்சாராய சோதனைக்காக ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மூட்டை ஒன்றை வைத்துக் கொண்டு வேகமாக வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சுரேஷ் வயது 29 என்றும் பால் கறக்கும் தொழிலாளி என்றும் தெரியவந்தது.
மேலும் அவரது அவர் கொண்டுவந்த மூட்டையை சோதனை செய்தபோது அதில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் சுரேஷ் மற்றும் செம்மரக்கட்டைகள், மோட்டார் சைக்கிளை குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபுவிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து குடியாத்தம் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர் மேலும் அவர் கொண்டு வந்த 8 கிலோ எடையுள்ள செம்மர கட்டைகளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த செம்மரக் கட்டைகளை சுரேஷ் எங்கிருந்து கொண்டு வந்தார். எங்கே கொண்டு சென்று கொண்டிருந்தார் என்ற பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






