என் மலர்
நீங்கள் தேடியது "1000 கன அடி நீர் திறப்பு"
- தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக நெல் பாசனத்துக்காக கடந்த 1-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- தற்போது 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக நெல் பாசனத்துக்காக கடந்த 1-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் 200 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று வரை 800 கன அடி என அதிகரிக்கப்பட்டது.
தற்போது நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
142 அடி உயரமுள்ள முல்லைப்பெரியாறு அணையில் தற்போது 129 அடி நீர் உள்ளது. வரத்து 340 கன அடி. பாசனத்துக்கு 900 கன அடி மற்றும் குடிநீர் தேவைக்கு 100 கன அடி என மொத்தம் 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.நீர் இருப்பு 4482 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணை நீர் மட்டம் 53.71 அடி. வரத்து 389 கன அடி. திறப்பு 869 கன அடி. இருப்பு 2516 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 48.50 அடி. வரத்து 39 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 85.93 அடி. திறப்பு 6 கன அடி.
முல்லைப்ெபரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை பொறுத்து லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
தற்போது 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.






