என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பத்தூர் விபத்து"

    • நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்த வினோத் லாரியின் பின்பக்கம் நடந்து சென்றார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக பின்நோக்கி வந்த லாரி வினோத்தை இடித்து தள்ளி மேலே ஏறி இறங்கியது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் ஜீவரத்தினம் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வினோத்(48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    வினோத் நேற்று மாலை நடைபயிற்சி சென்றார். அப்போது வீட்டின் அருகே உள்ள இரும்பு தொழிற்சாலையில் லோடு ஏற்ற கனரக லாரி வந்தது.

    நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்த வினோத் லாரியின் பின்பக்கம் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பின்நோக்கி வந்த லாரி வினோத்தை இடித்து தள்ளி மேலே ஏறி இறங்கியது.

    இதில் வினோத் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த டிரைவர் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×