என் மலர்
நீங்கள் தேடியது "கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமம்"
- வந்தவாசி இளங்காடு கிராமத்தில் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மருதாடு மற்றும் இளங்காடு கிராமங்களில் ஸ்ரீ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ அம்மச்சாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமங்கள் நடத்தினர்.
பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
பின்னர் அந்த புனித நீரை பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






