என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்துத் துறையில் உள்ள காலிபணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்"

    • போக்குவரத்துத் துறையில் உள்ள காலிபணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
    • போக்குவரத்துத் துறையில் உள்ள காலிபணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.


    பெரம்பலூர்:

    போக்குவரத்துத் துறையில் உள்ள காலிபணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டு பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் கூறியதாவது: கொரோனா நோயத் தொற்று காலத்துக்குப் பிறகு தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு பள்ளிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அரசு பள்ளிகளில் பிளஸ்2 வரை படித்து, கல்லூரிகளில் ேசரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பால், அரசு பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பேருந்து வசதியை அதிகரித்து கூடுதலாக பேருந்துகளை இயக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் அதன்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பள்ளி கல்லூரி வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகின்றனவா என அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.அனைத்து தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடமும் பள்ளி பேருந்துகளில் கேமரா பொருத்தவும், வேகக்கட்டுப்பாட்டு கருவியை நிறுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அரசு போக்குவரத்து கழகங்களிலுள்ள காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். உதிரி பாகங்கள் பற்றாக்குறை இருந்தால் அதை தீர்க்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசபேருந்து பயண அட்டையை ஸ்மார்ட் கார்ாக வழங்குவதற்கு ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு,

    அதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை ஏற்கெனவே வங்கப்பட்ட இலவசப் பயண அட்டையை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏரிகளில் விவசாயிகள் வண்டல்மண் எடுப்பதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


    ×