என் மலர்
நீங்கள் தேடியது "குப்பைகளால் சுகாதார சீர்கேடு"
- சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
- மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திண்டுக்கல் ரெயில்வே நிலையத்திலிருந்து எழில் நகர் செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.இங்கு சாலையின் ஓரங்களில் குப்பை கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், தேங்காய், நொங்கு மட்டைகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டுகின்றனர்.
இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது மேலும் மாலை நேரங்களில் குடியிருப்புகளில் கொசுக்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது.இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய பயணிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்கின்றனர்.
ஆகவே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் சாலையோர கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






