என் மலர்
நீங்கள் தேடியது "அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் வாயிற் கூட்டம்"
- அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது.
- அ.தி.மு.க. மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
அரியலூர்:
அரியலூரிலுள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து தொழிற் சங்கங்களுடன் இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 14 ஆவது ஊதிய உயர்வு, 25 சதவீதம் ஊதிய உயர்வு என பல செயலாற்ற முடியாத கோரிக்கைகளை வலியுறுத்திய தி.மு.க. மற்றும்
அதன் தோழமை கட்சிகளின் தொழிற் சங்கங்கள், தற்போது திமுக ஆட்சியில் கடந்த 12.5.2022 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது 25 சதவீத ஊதிய உயர்விற்கு பதிலாக 8 சதவீத ஊதிய உயர்வு கேட்டு பேச்சுவார்த்தையை தொடங்கினர்.
இதற்கு அண்ணா தொழிற்சங்கப் பேரவை மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் பேருந்துகளில் மகளிர் இலவச பயணத்திற்காக ஈடு செய்யும் வகையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பிக்சட் பேட்டா நாள் ஒன்றுக்கு ரூ.100 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பழைய பென்சன் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அவர்களால் வாக்குறுதிகள் அளிக்க மட்டுமே தெரியுமே தவிர அதனை செயல்படுத்த முடியாது. அவைகள் ஓட்டுக்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்று தெரிவித்த அவர், தொடர்ந்து ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தையின் போது நடந்தது என்ன என்பது குறித்து விளக்கினார்.
தொடர்ந்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாருமான ஆர்.டி.ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம ஜெயலிங்கம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சிவசுப்பிரமணியம்,
மாவட்ட துணை செயலாளர் தங்கமுத்து, மகளிர் அணி இளைஞரணி சிவசங்கர், தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கல்லங்குறிச்சி பாஸ்கர், நகர செயலாளர் செந்தில், செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், பாலு, வடிவழகன், அசோகன், மருதமுத்து, தா.பழுர் யூனியன் சேர்மன் மகாலட்சுமி அண்ணா தொழிற்சங்க பேரவை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்






