என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு"

    • பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • சிறப்பாக செயல்பட்ட தொழிற்சாலைகளுக்கு பரிசு வழங்கினார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 278 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றார். பிறகு இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, அரியலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள், தனிநபர்களை தேர்வு செய்யும் வகையில்

    மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இக்குழுவின் மூலம் சம்மந்தப்பட்ட நபர்களை தேர்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில், அரியலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட

    தாமரைக்குளம் டால்மியா சிமெண்ட் நிறுவனத்திற்கும் மற்றும் கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்திற்கும் அரசின் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரொக்க பரிசு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளைகலெக்டர் வழங்கினார்.

    ×