என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாகசாலை பூஜையில் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு"

    • ஜெயங்கொண்டம் அருகே கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற யாகசாலை பூஜையில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கலந்துகொண்டார்.
    • பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சுகந்த குந்தளாம்பிகை அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அருள் பாலித்து வருகிறார்கள்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜமீன் சுத்தமல்லி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுகந்த குந்தளாம்பிகை சமேத சுந்தரேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் சுகந்த குந்தளாம்பிகை அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் அருள் பாலித்து வருகிறார்கள்.

    இந்த கோவிலில் குடமுழுக்கு எப்போது நடைபெற்றது என்பது குறித்து எந்தவித வரலாற்றுச் சுவடுகளும் இல்லை நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்வதாக ஊர் பொதுமக்கள் தீர்மானித்த நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்றன.

    கடந்த பதினோரு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் தற்போது கோவில் திருப்பணிகள் முற்றிலும் முடிவுற்று கும்பாபிஷேகம் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி நடைபெற்ற கணபதி கோமம் மற்றும் யாகசாலை நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட நீதிபதிகள் மற்றும் ஊர் நாட்டாமைகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், சிவனடியார்கள் என பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×