என் மலர்
நீங்கள் தேடியது "மர்ம கும்பல் திருட்டு"
- பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் அபேஸ்
- கொள்ளையன் வெளியே ஓடி சென்றார்.
நெமிலி:
பாணாவரம் அடுத்த லட்சுமிபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சேட்டு விவசாயி இவரது மனைவி சுதா இவர்கள் இருவரும் தனது நிலத்தில் விவசாய வேலைகளை முடித்துவிட்டு வழக்கம் போல தூங்க சென்றனர்.
அவர்களது வீட்டின் பின்புற கதவை மர்ம கும்பல் உடைத்து பீரோவில் இருந்த 7 பவுன் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். சேட்டு வீட்டில் சத்தம் கேட்தால் பக்கத்து வீடான ஜெயபிரகாஷ் என்பவர் எழுந்து வந்து பார்த்துள்ளார்.
அப்போது சேட்டு வீட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளிேய ஓடி சென்றார்.அவரை பார்த்ததும் ெஜயபிரகாஷ் கூச்சலிட்டார். மர்ம நபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். பின்னர் சேட்டு வீட்டில் திருட்டு போன தெரியவந்தது. போலீசில் பாணாவரம் சேட்டு புகார் அளித்தார்.
போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






