என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்"

    அரியலூர் முடிகொண்டான் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடை பெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    விழாவையொட்டி கடந்த மாதம் 27-ம் தேதி சக்தி கரகம் எடுத்தலுடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், மாரியம்மன்,

    முருகன், கருப்புசாமி, அய்யனார், செல்லியம்மன், பெரியசாமி ஆகிய கோயில்களுக்கு தினந்தோறும் மாலை பொங்கல் வைத்து படையலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து, தினந்தோறும் இரவு மாரியம்மன், விநாயகர், கருப்பு சாமிகளின் வீதியுலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நாளான இன்று காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி திருமானூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் செய்திருந்தனர்.

    ×