என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை வாலிபர் சிக்கினார்"

    மரக்காணம் அருகே இன்று அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்த புதுவை வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன்(வயது 42). இவரது மனைவி ரேவதி(32). இவர்கள் நேற்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு காற்றுக்காக வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த ரேவதியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.

    இதில் திடுக்கிட்ட எழுந்த ரேவதி திருடன்... திருடன்... என அலறினார். அவரது அலறல் சத்தம்கேட்டு எழுந்த பச்சையப்பன் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் நகையுடன் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். வாலிபர் திருடிச்சென்ற தங்கசங்கிலியின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து ரேவதி மரக்காணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ரேவதியின் தங்கசங்கலியை பறித்து சென்ற வாலிபர் புதுவையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அந்த வாலிபரை பிடிக்க போலீசார் புதுவைக்கு விரைந்துள்ளனர்.

    ×