என் மலர்
நீங்கள் தேடியது "தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்"
ஆண்டு பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் நிறுவனம் அரசின் அனுமதி பெற்று பின்னர் மீண்டும் செயல்படும் என வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். #SterliteProtest #ThoothukudiFiring #AnilAgarwal
லண்டன் :
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் போராட்டக்குழுவை சேர்ந்த 13 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்துயுள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரும் வேதாந்தா குழும தலைவருமான அனில் அகர்வால், தூத்துக்குடி போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் துருதிர்ஷ்டமானது என இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் செயல்பட்டு வந்தது. தற்போது ஆண்டு பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை அரசின் அனுமதி பெற்றவுடன் மீண்டும் செயல்படும். தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலுக்கும் உதவிகரமாக ஸ்டெர்லைட் ஆலை இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். #SterliteProtest #ThoothukudiFiring #AnilAgarwal






