என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் கைது"
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கைதானதை கண்டித்து அக் கட்சியை சேர்ந்த 20 பேர் டி.வி. டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி:
தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கைதானதை கண்டித்து தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள டி.வி. டவரில் அந்த கட்சியின் மாநில மகளிரணி பொருளாளர் ஜெயலட்சுமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் 20 பேர் இன்று காலை மேலே ஏறி சென்று போராட்டம் நடத்தினார். சுமார் 150 அடி உள்ள டவரில் ஏறி கட்சி போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த அதியமான் கோட்டை போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு சென்று செல்போன் டவரில் இருக்கும் கட்சிக்காரரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.






