என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனல்மின் உற்பத்தி"

    காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக வருவதால் அனல்மின் உற்பத்தியை சிறிதளவு குறைத்திருக்கிறோம். இதனால் நிலக்கரி இருப்பு அதிகமாகி வருகிறது என்று அமைச்சர் தங்கமணி சட்டசபையில் கூறினார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க. உறுப்பினர் செம்மலை, ‘‘அனல்மின் உற்பத்திக்கான நிலக்கரி இருப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் தங்கமணி அளித்த பதில் வருமாறு:-

    வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதில்லை என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. எனவே வன மாநிலங்களில் இருந்து நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது கோடைகாலம் என்பதால் இந்தியா முழுவதும் அனல் மின் உற்பத்தி அதிகமாக நடைபெறுகிறது.

    நிலக்கரி கையிருப்பு 5 நாள் என்ற விகிதத்தில் இருந்தது. நிலக்கரி வரத்து தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. காற்றாலை மின் உற்பத்தியும் அதிகமாக வருவதால் அனல்மின் உற்பத்தியை சிறிதளவு குறைத்திருக்கிறோம். இதனால் நிலக்கரி இருப்பு அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் மின் உற்பத்தி எந்த விதத்திலும் பாதிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×