என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் டிரைவரை தாக்குதல்"

    திருவல்லிக்கேணியில் பஸ் டிரைவரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை விவேகானந்தர் இல்லத்தில் இருந்து கொருக்குப்பேட்டைக்கு சென்ற 32பி மாநகர பஸ்சை பாபு சாலேசா (40) என்பவர் ஓட்டிச் சென்றார். திருவல்லிக்கேணி நெடுஞ் சாலையில் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் மெதுவாக நகர்ந்து சென்றது. எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் மாநகர பஸ்சுக்கு எதிரே நின்று கொண்டு பஸ்சை பின்னோக்கி இயக்குமாறு கூறினர்.

    அதற்கு டிரைவர் பஸ்சுக்கு பின்னால் நிறையபேர் நிற்பதால் பினே நகர்த்த இயலாது. நீங்கள் விலகி செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் டிரைவருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் 3 பேரும் சேர்ந்து டிரைவரை தாக்கினார்கள். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள்ளாக 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதையடுத்து திருவல்லிக்கேணி போலீசில் டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் தேடினர். இன்று காலையில் முகமதுபாஷா (19), யூனிஸ்பாஷா (19), தமீம் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ×