என் மலர்
நீங்கள் தேடியது "நாகை முதியவர் பலி"
நாகையில் வெயிலுக்கு முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தி ஏற்படுத்தியுள்ளது.
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் நாகூரை அடுத்த பூதங்குடி கம்பர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60). விவசாய கூலி தொழிலாளி.
இவர் நரிமணத்தில் உள்ள ரேசன் கடையில் உள்ள பொருட்கள் வாங்க நரிமணம் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் தாங்க முடியாமல் திடீரென கிருஷ்ணன், ரோட்டில் சுருண்டு கீழே விழுந்தார். இதில் அவரது பின்பக்க தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






