என் மலர்
நீங்கள் தேடியது "சிலையில் ஏறிய மர்ம நபர் கைது"
அமெரிக்காவின் அடையாள சின்னமாக அமைந்துள்ள சுதந்திர தேவி சிலை மீது ஏறிய நபரால் அங்கு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. #LibertyStatue
நியூயார்க்:
அமெரிக்காவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது நியூயார்க் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை.
இந்தச் சிலை மீது நேற்று மனித உருவம் ஒன்று ஏறிச்சென்று உட்கார்ந்து கொண்டிருப்பதாக நியூயார்க் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு வந்த போலீசார் சுதந்திர தேவி சிலையை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர். சிலையின் மேலே உள்ள ஒரு பீடத்தில் மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டனர்.
அவரை கீழே இறங்குமாறு கேட்டும் அவர் மறுத்துவிட்டார். நான்கு மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த நபரை கைது செய்தனர். அவரை கீழே இறக்கி கொண்டு வந்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அமெரிக்காவி்ல் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை ஏஜென்சி முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலைமீது ஏறி போராட்டம் நடத்த முயன்றது தெரிய வந்தது.
சுதந்திர தேவி சிலை மீது மர்ம நபர் ஏறியது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #LibertyStatue






