என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டுப்பாளையத்தில் இளம்பெண் தற்கொலை"

    மேட்டுப்பாளையத்தில் கடன் தொல்லையால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் சிவந்த கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். (வயது 29). இவரது மனைவி பிரபாவதி (28). இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளான். ஈஸ்வரன் சுண்டல் வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாவதி தீபாவளி சீட்டு நடத்தினார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் பலரிடம் கடன் வாங்கினார். கடனை அடைக்க வீட்டு பத்திரத்தையும் அடகு வைத்தார். ஆனால், கடன் தொல்லை தீரவில்லை.

    இதனால் பிரபாவதி மன வேதனையில் இருந்து வந்தார். அவருக்கு ஈஸ்வரன் ஆறுதல் கூறியும் பிரபாவதி சமாதானம் அடையவில்லை.

    இந்த நிலையில் வீட்டில் கணவன், மகன் தூங்கிய பின்னர் பிரபாவதி சமையல் அறைக்கு சென்று அங்கு மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×