என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய தேர்தல்"
இந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதையொட்டி இந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்டகஸ் கூறுகையில், “அமெரிக்காவின் கண்ணோட்டத்தில் இருந்து நான் கூறுவது என்னவென்றால், இந்திய தேர்தல்களின் நேர்மையில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் சேர்ந்து நாங்கள் பணியாற்றுவோம்” என்றார்.
மேலும் அவர், “மற்ற நாடுகளுக்கு அனுப்புவது போல் இந்தியாவுக்கு தேர்தல் பார்வையாளர்களை நாங்கள் அனுப்புவதில்லை. ஏனெனில் இந்தியத் தேர்தல் ஆணையம் மிகவும் சுதந்திரமாகச் செயல்படுகிறது. நாங்கள் இந்திய அரசுடன் வலுவான உறவுகளை வைத்திருக்கிறோம். அனைத்து விவகாரங்களிலும் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்” என கூறினார்.
அத்துடன், “மனித வரலாற்றிலேயே ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாக இந்திய தேர்தல் விளங்குவதாக சிலர் என்னிடம் தெரிவித்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புத திருவிழாவை மக்கள் அமைதியுடன் நடத்திக் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக இந்திய மக்களை நாங்கள் பாராட்டுகிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தலையும் ஒரே சமயத்தில் நடத்துவது சாத்தியமா? என்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் சட்ட ஆணையம் இன்று கருத்துக்களை கேட்க உள்ளது. #OneNationOneElection #LawCommission
புதுடெல்லி :
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு காய்நகர்த்தி வருகிறது.
மத்திய சட்ட ஆணையமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.
அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.
இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் முடிவு செய்தது. அதன்படி டெல்லியில், இன்றும் நாளையும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
இக்கூட்டம் டெல்லி கான்மார்க்கெட்டில் உள்ள லோக்நாயக் பவனில் நடைபெற உள்ளது. முதல் நாள் கூட்டத்தில் முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களின் தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர். அதிமுக சார்பில், மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் பி.வேணுகோபால், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அதிமுகவின் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளனர். #OneNationOneElection #LawCommission