என் மலர்
நீங்கள் தேடியது "திமுக பிரமுகர் மகள் பலி"
ஆண்டிப்பட்டி அருகே இன்று காலை நடந்த விபத்தில் தி.மு.க. பிரமுகர் மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி பூங்கோதை (வயது46). இவர் ஆண்டிப்பட்டி தி.மு.க. நகர செயலாளர் திருமலையின் மகளாவர்.
பூங்கோதைக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இன்று காலை மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது கம்பத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் பூங்கோதை மீது பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த பூங்கோதை சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டிவந்த சின்னமனூரை சேர்ந்த ஜெயகோபிநாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூங்கோதையின் உடல் தேனி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.






