என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரம்பூர் சூதாட்டம்"

    பெரம்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    பெரம்பூர் டி.டி.தோட்டம் 4-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்திருப்பவர் அருண் குமார்.

    இவரது வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து திரு.வி.க.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்- இன்ஸ்பெக்டர் முபாரக் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அருண் குமாரின் வீட்டில் சூதாட்டம் நடப்பது உறுதியானது. அவரையும், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அருண்குமார் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீதர், பூக்கடை ராஜேந்திரன், ஏழுமலை, வெற்றிச் செல்வன், கன்னியப்பன், சிவகுமார், கார்த்திகேயன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஸ்ரீதர் அ.தி.மு.க. பகுதி துணை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×