என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோகித் ஹரிகரன்"

    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் இரண்டு கைகளாலும் பந்து வீசி அசத்தினார். #TNPL2018 #KV
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 22-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆன மோகித் ஹரிகரன் (வயது 18) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 பந்தில் தலா 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 77 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் களம் இறங்கியது. 19.1 ஓவரிலேயே சேஸிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது காஞ்சி வீரன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான மோகித் ஹரிகரன் பார்வையாளர்களின் கவனைத்தை ஈர்த்தார். இதற்கு காரணம் இரண்டு கைகளாலும் பந்து வீசியதுதான்.

    இடது கை பேட்ஸ்மேன் பேட்டிங் செய்யும்போது வலது கையாலும், வலது கை பேட்ஸ்மேன் பேட்டிங் செய்யும்போது இடது கையாலும் பந்து வீசி அசத்தினார். 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்த இவர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. என்றாலும் அனைத்து பார்வையாளர்களின் பாராட்டை பெற்றார்.
    ×