என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெப்பக்குளம் சீரமைப்பு"

    திருப்பதி கோவில் தெப்பக்குளத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து புதியதாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

    இதையொட்டி தெப்பக்குளத்தை சீரமைக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். கடந்த 3-ந் தேதி முதல் பராமரிப்பு பணி தொடங்கியது. இதனால் பக்தர்கள் தெப்பக்குளத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டு குளத்தில் இருந்த பழைய தண்ணீர் வெளியேற்றப்பட்டன.

    மேலும் குளத்தில் வீசிய நாணயங்கள், துணிகள் அப்புறப்படுத்தப்பட்டு மராமத்து பணிகள் நடைபெற்றது. நேற்று மாலை மராமத்து பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து தெப்பக்குளத்தில் புதியதாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து பக்தர்கள் தெப்பக்குளத்தில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.  #TirupatiTemple



    ×