என் மலர்
நீங்கள் தேடியது "கொலை வழக்கு விசாரணை"
கொலை வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு சிதம்பரம் கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.
சிதம்பரம்:
சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வடமூர் கிராமத்தில் கடந்த 2013-ம் ஆண்டு சம்பத்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குபதிவு செய்து குற்றவாளிகள் 14 பேரை கைது செய்தார்.
இந்த வழக்கு விசாரணை சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகும்படி தற்போது தேனியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முருகானந்தத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதனைத்தொடர்ந்து சிதம்பரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர் முருகானந்தத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.






