என் மலர்
நீங்கள் தேடியது "பூண்டு விலை வீழ்ச்சி"
- மத்தியபிரதேசம், குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பூண்டின் வரத்து அதிகரித்து உள்ளது.
- கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை நீலகிரி மலைப் பூண்டு ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையாகி வந்தது.
ஊட்டி:
மத்தியபிரதேசம், குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பூண்டின் வரத்து அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கம் அதிகரிப்பால் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக சந்தைகளுக்கு அதிக அளவில் பூண்டு கொண்டு வரப்படுவதால், நீலகிரி பூண்டின் விலையில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை நீலகிரி மலைப் பூண்டு ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது கிலோ ரூ.65 முதல் ரூ.110 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.
இதன்காரணமாக உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் நீலகிரி விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் நீலகிரி பூண்டுக்கு போதிய கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திண்டுக்கல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, போளூர், கிளாவரை, கும்பூர், கீழானவயல், குண்டுப்பட்டி, புத்தூர், கூக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் சாகுபடி செய்த விவசாயிகள் காட்டுப்பன்றிகளின் அட்டூழியத்தால் பூண்டினை விளைவித்து வருகிறார்கள். ஆனால் தற்போது இவர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கிலோ பூண்டு ரூ.350-க்கு விற்பனையானது. 2017-ம் ஆண்டு ரூ.200-க்கு விலை போனது. ஆனால் இந்த ஆண்டு கிலோ ரூ.40-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே நாங்கள் உரம், பூச்சிக் கொல்லி மருந்து விலை உயர்வால் கடும் அவதியடைந்து வருகிறோம். தற்போது இந்த விலை சரிவு எங்களுக்கு கவலை அளித்துள்ளது என்றனர்.






