என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளாவில் கனமழை நீடிக்கும்"

    கேரள மாநிலத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #KeralaRain #WeatherWarning
    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தி உள்ள நிலையில், மழை முன்னறிப்பினை இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-



    கேரளாவில் இன்றும் நாளையும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ஒடிசா, கொங்கன், கோவா, சத்தீஸ்கர், கடலோர ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு அரபிக் கடல், மத்திய, தெற்கு வங்கக் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #KeralaRain #WeatherWarning
    ×