என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் கூட்டுறவு சங்க தேர்தல்"

    ஆர்.கே.நகரில் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய அங்கு வந்த தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே மோதல் போக்கும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது. #ADMK #FishermenCooperativeSocietyElection

    ராயபுரம்:

    ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கூட்டுறவு மீனவர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. 20 இடங்களில் இந்த தேர்தல் நடக்கிறது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. காசிமேடு, சூரியநாராயண தெருவில் உள்ள மீன் வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் மீன் வளத்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இன்று காலையில் இருந்தே தினகரன் ஆதரவாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்ய அங்கு திரளாக கூடினார்கள். அதுபோல அ.தி.மு.க.வினரும் திரண்டனர்.

    நீண்ட நேரம் தேர்தல் அலுவலகம் முன்பு கூடி நின்றதால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள்- அ.தி.மு.க.வினர் இடையே மோதல் போக்கும், தள்ளு முள்ளும் ஏற்பட்டது.

    உடனே வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமி‌ஷனர் ரெவலி பிரியா, உதவி கமி‌ஷனர் ரத்தினவேல் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். வேட்புமனுக்களை விரைவாக தாக்கல் செய்து விட்டு கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமும் காணப்பட்டது.

    ×