என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரும்பாக்கத்தில் பெண் தற்கொலை"

    கிருமாம்பாக்கத்தில் மகளுக்கு கணவர் நகை வாங்கி தராததால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரி (வயது 50). கட்டிட தொழிலாளியான இவர் செங்கல் சூளை வியாபாரமும் செய்து வருகிறார்.

    இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி செஞ்சியில் வசித்து வருகிறார். 2-வது மனைவி பவானி. கிருமாம்பாக்கத்தில் மாரியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பவானி தனது மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டு முன்பு அடுக்கி வைத்திருந்த செங்கற்களை விற்று மகளுக்கு நகை வாங்கி தருமாறு பவானி தனது கணவர் மாரியிடம் வற்புறுத்தி வந்தார். ஆனால், இதற்கு மாரி சம்மதிக்கவில்லை.

    முதல் மனைவிக்கு பயந்து மாரி நகை வாங்கி தர மறுப்பதாக பவானி எண்ணினார். இதனால் மனமுடைந்த பவானி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கூரையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×