என் மலர்
நீங்கள் தேடியது "விஜயகுமார் எம்.பி."
கிராமங்களில் சுகாதார நிலையை அறிய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செல்போன் செயலியை விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
ஊரக தூய்மை பாரத இயக்கம் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் மூலம் ஊரக பகுதிகளில் தனிநபர் இல்லக் கழிவறைகள் கட்டும் திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்றவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஊரக தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் கிராமங்களில் பொது சுகாதாரம் மேம்பட்டிருக்கிறதா? என்பதை அறிய "தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்" என்ற பெயரில் புதிய செல்போன் செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த செயலியை செல்போனில் உள்ள பிளே ஸ்டோரில் " SSG 18 " என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் செயலி மூலம் பொதுமக்கள் தங்களது கிராமத்தின் சுகாதார நிலை பற்றி பதிவு செய்யலாம்.
இந்த செயலி தொடக்க விழா தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட இலந்தையடித்தட்டில் நேற்று நடந்தது. விழாவில் விஜயகுமார் எம்.பி. கலந்துகொண்டு புதிய செயலியை தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இங்கர்சால், அ.தி.மு.க. நிர்வாகிகள் சகாயம், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இலந்தையடிதட்டில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகளை விஜயகுமார் எம்.பி. திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.






