என் மலர்
நீங்கள் தேடியது "ஹுக்கா போதை மையம்"
அண்ணாநகரில் வாடகைக்கு வீடு எடுத்து ஹுக்கா போதை மையம் நடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் போதையில் இருந்த கல்லூரி மாணவர்களை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அம்பத்தூர்:
அண்ணாநகர், சாந்தி காலனி, 4-வது அவன்யூவில் உள்ள ஒரு வீட்டுக்கு, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் சந்தேகத்திற்கிடமாக அடிக்கடி வந்து சென்றனர்.
இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உதவி கமிஷனர் குணசேகரன் மற்றும் போலீசார் அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பைப் மூலம் உறிஞ்சும் ‘ஹுக்கா’ போதை மையம் நடத்தி வந்தது தெரிந்தது. மேலும் ஏராளமான கல்லூரி மாணவர்களும் அங்கு போதையில் இருந்தனர்.
இதையடுத்து போதை மையம் நடத்திய உசிலம்பட்டியை சேர்ந்த ஒருவர், ராயப்பேட்டை அசோக் குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கடந்த 2 மாதமாக அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து போதை மையம் நடத்தி வந்தது தெரிந்தது.
வீட்டில் இருந்த போதைக்கு பயன்படுத்திய பொருட்கள், புகையிலை, பைப்புகள், மண் குடுவைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் போதையில் இருந்த கல்லூரி மாணவர்களை போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.