என் மலர்
நீங்கள் தேடியது "டாக்டர் ரோன் மால்கா"
இந்தியாவுக்கான புதிய தூதராக டாக்டர் ரோன் மால்காவை நியமித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார். #BenjaminNetanyahu #RonMalka
ஜெருசலேம்:
இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதராக பணியாற்றியவர் டேனியல் கார்மன். இவரது பதவிக்காலம் ஆகஸ்டு மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய தூதரை நியமிக்கும் பணிகளில் பிரதமர் நேதன்யாகு ஈடுபட்டு வந்தார்.
அதன்படி, சட்ட கல்லூரியின் மூத்த பேராசிரியரும், வங்கி துறையில் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவருமான டாக்டர் ரோன் மால்கா என்பவரை இந்தியாவுக்கான தூதராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக இந்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர். #BenjaminNetanyahu #RonMalka






