என் மலர்
நீங்கள் தேடியது "கோவை ரெயில் மோதி"
கோவையில் ரெயில் மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை கணபதி டெக்ஸ்டூல்ஸ் பாலம் பகுதியில் நேற்று இரவு 70 வயது மதிக்க தக்க ஆண் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் 60 வயது மதிக்க தக்க ஆண் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ரெயிலில் அடிபட்டு இறந்த 2 பேர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






