என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துலாம்"

    • மயிலாடுதுறையில் அபயாம்பிகை மயில் வடிவம் கொண்டு பரமசிவனை பூஜை செய்கிறார்.
    • 63 சித்தர்கள் வாழ்ந்து பெருமை சேர்ந்த ஊராக மயிலாடுதுறை விளங்குகிறது.

    'புஷ்கரம்' என்பது ஒரு வடமொழி சொல். நீரில் இறைவனின் அருள்சக்தி சேர்ந்தால் தீர்த்தம் என்று பெயர்.

    அந்த அருள் சக்தி நிறைந்த தீர்த்தங்கள், திருக்கோவில்களில் இருக்கும். புண்ணிய நதிகளும் தீர்த்தமாக கருதப்படுகிறது.

    இந்தியாவில் 7 புண்ணிய நதிகள் உள்ளன.

    'புஷ்கரம்' என்பவர் வருண பகவானின் தாய் மாமன் ஆவார். அவர் எல்லா நதிகளிலும் அருள்பாலித்து கொண்டு தீர்த்தமாக மாறி உயிரினங்களை வாழ வைக்கிறார்.

    இந்த புண்ணிய நதிகள் எங்கு பாய்கிறதோ, அங்கு பூமி விளையும், வாழ்வு வளம்பெறும்.

    குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடையும் காலத்தில், துலாம் ராசிக்கு உரிய காவிரி ஆற்றில் புஷ்கரம் விழா நடக்கிறது.

    குரு பகவான் ஒரு ஆண்டு அங்கிருந்து அருள்பாலிப்பார்.

    அந்த ஆண்டு நடைபெறும் புஷ்கரம், காவிரி மகாபுஷ்கரமாக கொண்டாடப்படுகிறது.

    இந்த விழாவில் 3 ஆயிரம் துறவியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்ற பழமொழி உள்ளது.

    இதில் ஆயிரம் என்பது மங்கலம், சுபம், பரமசிவம் என்ற ஆயிரம் அர்த்தங்களை கொடுக்கிறது.

    அத்தனையும் மயிலாடுதுறை மக்கள் பெறுவார்கள்.

    மயிலாடுதுறை ஒரு முக்தி ஸ்தலம் ஆகும்.

    இங்கு பாயும் புண்ணிய நதியான காவிரியில் மகாபுஷ்கரம் விழாவின் போது புனித நீராடினால் அனைவரும் சுப வாழ்வு வாழ்ந்து பரமானந்தம் பெறலாம்.

    இங்கு ரிஷப பகவான் பாதாளத்தில் இருந்து வெளிபட்டு வழிபடுகிறார்.

    மயிலாடுதுறையில் அபயாம்பிகை மயில் வடிவம் கொண்டு பரமசிவனை பூஜை செய்கிறார்.

    63 சித்தர்கள் வாழ்ந்து பெருமை சேர்ந்த ஊராக மயிலாடுதுறை விளங்குகிறது.

    உலகிலேயே ஞானபூமி, அருள்பூமி, தெய்வீக பூமி என்று போற்றப்படுவது மயிலாடுதுறை ஆகும்.

    இந்த புனித பூமியை தெய்வீக பூமியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துலாம் ராசியில் இருந்து விருச்சகம் ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்ததை அடுத்து, தமிழகத்தில் பல இடங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. #GuruPeyarchi2018 #GuruPeyarchi

    குருபகவான் துலாமில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இன்று இரவு இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சியை ஒட்டி திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் அதிகளவில் குவிந்து குரு பகவானை தரிசித்து வருகின்றனர்.

    மேலும், தமிழகத்தில் பல கோவில்களிலும் குரு பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    ×