என் மலர்
நீங்கள் தேடியது "ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை"
- கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 12 கோடியாக இருந்தது
- கடந்த 10 ஆண்டுகளில் இது இரட்டிப்பாகி உள்ளது.
ஜெனீவா:
உலகளாவிய அகதிகள் நிலவர அறிக்கையை ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
போர், வன்முறை, சித்ரவதை காரணமாக உலகம் முழுவதும் வீடுகளை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி 12 கோடியே 21 லட்சமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 12 கோடியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இது இரட்டிப்பாகி உள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் இருந்த நிலவரப்படி, உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்து, 7 கோடியே 35 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை, பல ஆண்டுகளாக அகதிகளாக மாறியவர்கள் எண்ணிக்கை ஆகும். அவர்களில் சிலர் கடந்த ஆண்டு வீடுகளுக்கு திரும்பிய போதிலும், புதிதாக வேறு சிலர் வெளியேறி விட்டனர்.
ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ குடியேறும் நோக்கத்தில் பலர் வெளியேறியதாக பணக்கார நாடுகளில் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், தங்கள் நாட்டின் எல்லையை தாண்டிய மூன்றில் இரண்டு பங்கு பேர் இன்னும் அண்டை நாடுகளில்தான் உள்ளனர்.
அதிகபட்சமாக, உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடான் நாட்டில் 1 கோடியே 40 லட்சம் பேர் அகதிகள் ஆகி உள்ளனர். அடுத்தபடியாக, சிரியா நாட்டில் 1 கோடியே 35 லட்சம் பேரும், ஆப்கானிஸ்தான் நாட்டில் 1 கோடி பேரும், உக்ரைன் நாட்டில் 88 லட்சம் பேரும் அகதிகளாக மாறினர் என தெரிவித்துள்ளது.
பெரும்பான்மை புத்த மதத்தினரைக் கொண்ட மியான்மரில், 5 சதவிகித முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அந்நாட்டில் உள்ள ராக்கைன் மாநிலத்தில், பௌத்தர்களுக்கும் ரோகிங்ய இஸ்லாமிய மக்களுக்கும் இடையே, இனமோதல் ஏற்பட்டு பெரும் கலவரமாக மாறியது.
பௌத்தர்களால் ரோகிங்யா இனத்தவர்கள் குறிவைத்துப் தாக்குதல் மற்றும் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அண்டை நாடுகளான வங்காளதேசம், இந்தியா மற்றும் மலேசியா நாடுகளுக்கு பெரும்பாலான ரோகிங்யா மக்கள் அகதிகளாகப் படையெடுத்தனர்.
அவ்வாறு அடைக்கலம் தேடி இந்தியாவிற்கு வந்த ரோகிங்கிய அகதிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அங்காங்கே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், 18 ஆயிரம் ரோகிங்கிய அகதிகள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கியா நாடுகள் அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் ஐக்கியா நாடுகள் அகதிகள் முகமையில் பதிவு செய்துள்ளனர்.
மேலும், கைது நடவடிக்கைகள் மற்றும் நாடுகடத்தல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக இவர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக வசித்து வந்த ரோகிங்யா அகதிகள் 7 பேர் மியான்மருக்கு நாடுகடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. #UNHCR #Rohingya






