என் மலர்
நீங்கள் தேடியது "மழை பள்ளம்"
குடிபேரம்பாக்கம் அருகே பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Death
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஒரகடத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 55). கூலித் தொழிலாளி.
நேற்று மாலை அவர் வேலைக்கு சென்று விட்டு குடிபேரம்பாக்கம் பாலம் அருகே நடந்து வந்தார்.
அங்கு கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக கேபிள் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் குளம் போல தேங்கி கிடந்தது.
இதனை கவனிக்காத தேவேந்திரன் பள்ளத்துக்குள் தவறி விழுந்தார். மழைநீரில் மூழ்கிய அவர் தத்தளித்தார். அந்த நேரத்தில் அவ்வழியே யாரும் வராததால் தெரிய வில்லை. சிறிது நேரத்தில் மழைநீரில் மூழ்கி தேவேந்திரன் பலியானார்.
இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பணிக்காக தோண்டப்படும் பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #Death






