என் மலர்
நீங்கள் தேடியது "துப்பாக்கி குண்டு வழக்கு"
கோட்டூர்புரத்தில் 27 துப்பாக்கி குண்டுகளை பதுக்கிய வழக்கில் ரவுடி யமஹா சீனுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வருபவர் யமஹா சீனு என்கிற சீனிவாசன்.
திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவனான மோகன் ராமின் நெருங்கிய கூட்டாளியான இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன் ராஜை மும்பையில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரது தகவலின் பேரில் கடந்த 8-ந்தேதி சீனுவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இல்லை.
மோட்டார் சைக்கிளில் நடத்தப்பட்ட சோதனையில் 27துப்பாக்கி குண்டுகளை பதுக்கி வைத்தது தெரிய வந்தது.
தப்பி ஓடி தலைமறைவான சீனுவை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சீனு போலீசில் சிக்கினார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். துப்பாக்கி குண்டுகளின் பின்னணி என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






