என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை தனியார் காப்பகம்"

    திருவண்ணாமலை தனியார் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் மேலும் ஒருபெண்ணை போலீசார் கைது செய்தனர். #Orphanage #GirlsHarassment #POCSOAct
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நாச்சிப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் கடந்த 17-ந் தேதி கலெக்டர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கிருந்த குழந்தைகள், பெரும்பாக்கம் சாலையில் உள்ள வரவேற்பு இல்லத்திற்கு மாற்றப்பட்டனர்.

    பின்னர் அங்கிருந்த சில சிறுமிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் தனியார் காப்பகத்தின் நிர்வாகிகளான திருவண்ணாமலை திருவள்ளுவர் நகரை சேர்ந்த லூபன்குமார் (வயது 65), அவரது மனைவி மெர்சிராணி (55), மெர்சிராணியின் சகோதரர் மணவாளன் (60) ஆகியோர் சில சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துதல், பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலை செய்ய வைத்து தகாத வார்த்தையால் பேசியது போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லூபன்குமார், மெர்சிராணி, மணவாளன் ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் இதற்கு உடந்தையாக இருந்து மணவாளனின் மனைவி ஜான்சிராணி (50) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். #Orphanage #GirlsHarassment #POCSOAct

    ×