என் மலர்
நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பொருள் தடை"
அறந்தாங்கி அருகே ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில், சுகாதார ஆய்வாளர் சேகர் முன்னிலையில் நேற்று இரவு அறந்தாங்கி பகுதியில் உள்ள ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவது குறித்து திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 230 கிலோ ஓட்டல்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளரிடம் இருந்து ரூ.6 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. #PlasticBan
சென்னை:
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் விரிப்புகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் தங்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்டவைகளில் உள்ள தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை நாளை (திங்கட்கிழமை) வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வருகிற 1-ந்தேதி முதல் தயாரித்தாலோ, விற்பனை செய்தாலோ மற்றும் இருப்பு வைத்திருந்தாலோ அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விதமாக மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.