என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள் போதை பொருள்"

    கள் போதை பொருள் என நிரூபித்தால் ஒரு தொகுதியில் வைகோ வெற்றி பெறுவார் என்று செ.நல்லசாமி கூறியுள்ளார். #vaiko #parliamentelection

    ஈரோடு:

    கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளுக்கு தடை நீடித்து வருகிறது. இதை நீக்க கோரி 15 ஆண்டுகளுக்கு மேலாக கள் இயக்கம் போராடி வருகிறது. பல போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளது. இந்த போராட்டத்தில் ம.தி.மு.க.வும் பங்கேற்று உள்ளது. கள் தடை நீக்கம் ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றது.

    இந்த நிலையில் ம.தி.மு.க. கள்ளை ஆதரிக்காது. கள்ளும் ஒரு போதை பொருள் தான். கள் பற்றி இனி யாரும் வாய் திறக்க கூடாது என வைகோ கூறியுள்ளார்.


    வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வைகோவுக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைகோ கள் இயக்கத்துடன் வாதிட்டு கள்ளும் தடை செய்யப்பட வேண்டிய ஒரு போதை பொருள் என நிரூபித்து விட்டால் அவருக்கும் அவரது கட்சிக்கும் வலு கூடும். வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக அமையும். அவரது வெற்றி கள் இயக்க போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த வாய்ப்பை வைகோ பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #vaiko  #parliamentelection

    ×